பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள “சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதியின் கீழ் நன்மைகளைப் பெற முடியும் எனவும் இது தொடர்பில், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.