15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று பிற்பகல் நாடாளுமன்ற வீதி மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொல்துவ சந்தியில் இருந்து கியென்ஹேம் சந்தி வரையான வீதி பிற்பகல் 3 மணி முதல் மூடப்படும் எனவும் குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்