follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP3சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

Published on

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பட்டதாரிகள் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் கடமையாற்ற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக உள்ளதாகவும் இந்த நிலையில் இம் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களை புறக்கனித்து விட்டு இங்குள்ள தமிழ் பாடசாலைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருவதாக பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எனவே இவ் விடயம் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையை முன் வைத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது...