ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
தெற்கு காஸா நகரமான ரஃபாவில் தங்கள் இராணுவப் பிரச்சாரத்தை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தும் முயற்சி இது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பலஸ்தீனியர்களை பூமியில் இருந்து துடைத்தழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ரஃபா நகரை தாக்கி வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தினால் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் சட்டத்தரணிகள் தற்போது தமது பதிலை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸா பகுதியில் பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக தென்னாப்பிரிக்கா கடந்த ஜனவரி மாதம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ஏற்கனவே பரிசீலித்து வருகிறது.