இரட்டைக் குடியுரிமை தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய விசேட தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்ட டயானா கமகே, தான் இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் அவரால் ஒத்திவைக்கப்பட்ட விடயங்களை தற்போது படிப்படியாக மீளப் பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (10) முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் 03 இனை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், டயானா கமகே அமைச்சர் வாசஸ்தலத்தை வழங்கவில்லை எனவும், அதற்கான ஆவணங்களை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கையளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டுக்காக உழைக்கும் வாய்ப்பை இழந்தமையால் மிகுந்த மனவேதனையில் உள்ள அமைச்சர் மீண்டும் தாய்நாட்டிற்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானியாவுக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை முன்னாள் அமைச்சர் மறுத்துள்ளார்.
“டயானா தனது தாய் நாட்டிற்குத் திரும்பப் போகிறார்” என்ற தலைப்பில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு வெளியிட்ட அவர், “இது எனது தாய்நாடு” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக பாராளுமன்றத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை தொடர்பில் இந்த நாட்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றதுடன் இது தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் டயானா கமகே நேற்று விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடலில் பிரபல வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டயானா கமகே தமக்கு தரப்பு வழங்குவதற்கும், அக்கட்சியின் பதவிகளில் இருந்து தன்னை நீக்குவதற்கும் எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்தக் கலந்துரையாடலில் தேவையான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இலங்கை எதிர்கொண்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது, டயானா கமகே அவரது பங்களிப்பாக நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ‘கஞ்சா ஏற்றுமதி’ செய்ய மும்முரமாக ஈடுபட்டவர். தொடர்ந்தும் அது குறித்து அவர் நாடாளுமன்றில் சூடான வாதங்களை முன்வைத்தவர். இதனால் அவரது கருத்துக்கு எதிராக ஆதரவாகவும் எதிராகவும் அன்றும் இன்றும் ஒலித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.