follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP2'அணு ஆயுதங்கள்' : இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த மிக பெரிய எச்சரிக்கை

‘அணு ஆயுதங்கள்’ : இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த மிக பெரிய எச்சரிக்கை

Published on

ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் திடீரென அணு ஆயுதங்கள் குறித்து மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் சில காலமாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் பார்த்தால் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீட்டித்து வருகிறது. இதனால் காசா மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மறுபுறம் இஸ்ரேல்- ஈரான் இடையேயும் மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன்பு மாறி மாறி தாக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. இதற்கிடையே அணு ஆயுதங்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஈரான் அளித்துள்ள வார்னிங் பகீர் கிளப்பியுள்ளது.

ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் ஒருவர், இஸ்ரேலுடன் அதிகரித்து வரும் பதற்றம் தொடர்பாகவும் அணு ஆயுத தாக்குதல் தொடர்பாகவும் கூறியுள்ள தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது இஸ்ரேலால் தங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றால்.. யார் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஈரானின் அணு ஆயுத நிலைப்பாட்டை மாற்ற வேண்டி இருக்கும் என்று அந்நாட்டு உட்சபட்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “அணுக்குண்டை உருவாக்கும் திட்டம் எதுவும் இப்போது எங்களிடம் இல்லை.. ஆனால் ஈரானின் இருப்புக்கு ஒருவேளை அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுத விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

ஈரான் இஸ்ரேல் இடையே கடந்த சில மாதங்களாகவே பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் சில முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இஸ்ரேல் தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஈரானும் பதிலடி கொடுத்தது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அங்குப் பதற்றம் அதிகரித்தது.

அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்து ஈரான் பேசுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2021இல் அணு ஆயுதங்களை உருவாக்க உள்ளதாக ஈரான் கூறியிருந்தது. மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் அதிகரித்தால் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரானின் அப்போதைய உளவுத்துறை அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்தாண்டு ஈரான் நாட்டில் சில பகுதிகளில் யுரேனியம் துகள்கள் காணப்பட்டன. அணு ஆயுதங்களை உருவாக்க இந்த யுரேனியம் ரொம்ப முக்கியமானது. திடீரென ஈரான் நாட்டில் இந்த யுரேனியம் கண்டெடுக்கப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்கச் சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஈரானும் உறுதி அளித்தது.

இருப்பினும், விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பை ஈரான் கொடுப்பதில்லை என்று ஆய்வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஈரான் மழுப்பலான பதில்களையே கொடுத்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் இஸ்ரேலுடன் பதற்றம் அதிகரித்துள்ள நேரம் பார்த்து ஈரான், மீண்டும் அணு ஆயுதங்கள் குறித்துப் பேசியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்து வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனது நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட...

ஜனாதிபதி அநுரவின் கீழ் 94 நிறுவனங்கள் உள்ளன – ஹரிணிக்கு 26, நலிந்தவுக்கு 41 நிறுவனங்கள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு...

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்

சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்புமேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். ஜனவரி 2020 முதல்...