எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையைஇ இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறைகள் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்போலகே தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த எரிவாயு விபத்துகள் தொடர்பான அறிவியல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு தொடர்பான வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் தொடர்பான செய்திகளை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்ப நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான 12 ஆய்வு அறிக்கைகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.