பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே இன்று (09) விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்.
இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய தகைமை எதுவும் கிடையாது என உச்ச நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த டயானா கமகே,
“எனது அரசியல் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.”
“நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். கையாலாகாததுகள் மறைந்திருந்த போது ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்றினார்.”
“இந்த முடிவு அப்படியே இருந்தால், அந்த கட்சியும் செல்லாது. ஏனென்றால் அந்த கட்சி என் கையெழுத்துடன் ஒதுக்கப்பட்டது. அதற்குள் பல நெருக்கடிகள் உள்ளன. அவற்றைப் பற்றி எதிர்காலத்தில் நான் உங்களுக்கு சொல்கிறேன்.”
“ஒரு பிரச்சினை என்றால், என்னை ஏன் ஐக்கிய மக்கள் சக்தியில் வைத்திருந்தார்கள்? எனக்கு தென்னாட்டு இரத்தம் உள்ளது. என் தந்தை ஒரு பிரிட்டிஷ் பெண்ணை மணந்தார். அது என் தவறு இல்லை. அது நல்லது. எனக்கு அது பிடிக்கும்.”