இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் பாராளுமன்றத்திற்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அது தொடர்பில் உச்ச நீதிமன்றத்திற்கு அஞ்சலி செலுத்துவதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்ததுள்ளது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக கஞ்சா வளர்ப்புக்கு இவர் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.