வரலாற்றில் இந்தியாவுடன் எதிர்ப்பு இருந்தபோதிலும், இப்போது அது மறைந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது இந்திய விஜயத்தின் போது நாட்டின் வளங்களை அந்நாட்டு வர்த்தகர்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பிரபல வர்த்தகர் அதானியின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியதாகவும் அநுர குமார திஸாநாயக்க இங்கு தெரிவித்துள்ளார்.
தனது கட்சிக்கு வெளிநாட்டு உறவுகள் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டதால் தான் இந்திய சுற்றுப்பயணத்தில் இணைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.