மாலைத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது. அங்கு இந்தியர்கள் ஏராளமானோர் சுற்றுலா சென்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தலில் வென்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலைத்தீவைப் புறக்கணிக்கும் நிலையில் இதனால் அந்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாலைத்தீவு அமைச்சர் இந்தியர்களிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியை மாலைத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மாலைத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலர் தவிர்தனர். இதனால் மாலைத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.
இதனால் சுற்றுலாவையே பிரதானமாக நம்பியிருக்கும் மாலைத்தீவு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும் என்று மாலைத்தீவு சுற்றுலா அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.