சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை பாரிஸில் உள்ள Élysée அரண்மனையில் சந்தித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சுடன் மூலோபாய கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்வதன் மூலம் இருதரப்பு உறவின் மூலோபாய ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய எதிர்பார்ப்பதாக ஷி ஜின்பிங் அங்கு வலியுறுத்தியுள்ளார்.
பிரான்சுடன் இருதரப்பு வர்த்தகத்தை சாதகமான மற்றும் சமநிலையான முறையில் அபிவிருத்தி செய்ய சீனா நம்புவதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும் குழுப் போட்டியைத் தடுப்பதிலும் இரு நாடுகளும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் சீன ஜனாதிபதி கூறினார்.
உக்ரைன் நெருக்கடி, பலஸ்தீன-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு அதிபர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஈரான் அணுசக்தி நெருக்கடி தொடர்பாக அரசியல் ஒப்பந்தத்தை உருவாக்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.