இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது.
அல் ஜசீரா தொலைக்காட்சி செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காஸாவில் போர் நடந்து கொண்டிருப்பதால் அல் ஜசீரா சேவைகளை நிறுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது.
‘அல் ஜசீரா’ ஒளிபரப்பால் இஸ்ரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அரசு தரப்பில் சொல்வதை “ஆபத்தான மற்றும் அபத்தமான பொய்.” என்று அல் ஜசீரா கூறியுள்ளது. “எல்லாவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.