நாட்டில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
இன்று மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியிலும் , நேற்று (28) கேகாலை, கொழும்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் 5 வீடுகளில் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய இம்மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 11 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந் நிலையில் புதிதாகக் கொள்வனவு செய்யும் சிலிண்டர்களை திறந்தவுடன் பல குமிழ்கள் ஒரே நேரத்தில் வெளியே வருகின்றன.
புதிதாக கொள்வனவு செய்யும் காஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டுச் செல்லும் நுகர்வோர், சீலை கழற்றி மூடியை திறந்தவுடன் இவ்வாறு குமிழ்கள் நிரம்பிக்கொள்கின்றன.
இதுதொடர்பில், காஸ் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்த கடை உரிமையாளர்களிடம் தெரிவிக்கும் போது, தங்களால் ஒன்றும் செய்யமுடியாது. இவ்வாறான சிலிண்டர்களை மீளவும் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனங்கள் தங்களுக்கு அறிவுறுத்தவில்லை என கையை விரித்துவிடுகின்றனர் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.