follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபரிசோதனைக்கு முன்பாகவே நாட்டில் பரவும் ஒமிக்ரோன்? சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

பரிசோதனைக்கு முன்பாகவே நாட்டில் பரவும் ஒமிக்ரோன்? சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Published on

ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் மாறுபாட்டை எடுத்துச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண வழி இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு மூலம் மட்டுமே இந்த வைரஸைக் கண்டறிய முடியும் என்றும் மாதிரிகள் மூலம் வைரஸை கண்டறியும் வரை, நாடு முழுவதும் தொற்று பரவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள மக்கள் இந்த மாறுபாட்டைக் கொண்டு செல்கிறார்களா என்பதை அடையாளம் காண முயற்சிப்பதை விட, ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை குறைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை தற்போதைய நிலையில் நாட்டை முடக்கும் எண்ணம் சுகாதார அமைச்சுக்கோ அரசாங்கத்திற்கோ இல்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் முடக்கம்

அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச்...

UGC புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பொறுப்பேற்றுள்ளார். சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப்...

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை...