ரோஜா என்றாலே பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதில் மருத்துவ குணங்கள் இருக்கு என்றால் எல்லோருக்கும் பிடிக்காமல் போகுமா என்ன? ரோஜா இதழ்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்களை கவரும் வண்ணங்களிலும் இருக்கிறது. இதில் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்.
ரோஜா பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும். மேலும், உடல் எப்போதும் சோம்பேறியாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே, அடிக்கடி காய்ச்சல் வரும் நபர்களுக்கு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ரோஜா இதழ்களை ஈட்டு பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்ததாக பயன்படுகிறது. எனவே, ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் இளமையாகவும் இருக்கும்.
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.