வடஅமெரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் எழும் தூசுக்களினால் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் புழுதி புயல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரீஸ் அதிகாரிகள் சூரிய ஒளி மற்றும் பார்வை தெரிவுநிலை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். தூசுக்களின் செறிவு காரணமாக மாசுபாடு அதிகரிப்பதுடன் சுகாதார பிரச்னைகள் ஏற்படலாம் எனவும் தெரித்துள்ளனர்.
2018-க்குப் பிறகு நாட்டைத் தாக்கும் மோசமான புழுதி புயல் இது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த புழுதி புயல் ஐரோப்பாவின் எல்லை வரை சென்றுள்ளது. தெற்கு பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.