ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்ஷி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். சுமார் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் ஈரானின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா திட்டத்தைத் திறந்துவைப்பதே அவரது விஜயத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இதேவேளை, ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.