இந்திய மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று (19) நடைபெற்றது.
மாலை 5 மணி வரையான நிலவரப்படி, 60% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
544 தொகுதிகளைக் கொண்ட இந்திய மக்களவை தேர்தலில் இன்று 102 தொகுதிகளில் மாத்திரம் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது.
இம்முறை தேர்தலில் தமிழகத்தில் சுமார் 6 கோடியே 23 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இவர்களுள் 10.92 இலட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 26 ஆம் திகதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கலாக 89 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.
ஜூன் மாதம் முதலாம் திகதி 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.