மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அப்துல்லா யாமீன் மேல்முறையீடு செய்தமை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை இரத்து செய்து உத்தரவிட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மறுவிசாரணை குறித்த திகதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மாலைதீவில் அடுத்த 2 நாட்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அப்துல்லா யாமீனின் விடுதலை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது முய்சுவின் கட்சிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.