follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுதனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தம்

தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தம்

Published on

யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாதகல் கிழக்கு ஜெ- 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.

அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி மரியாதை

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

கொழும்புக்கு 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல்...