இஸ்ரேலுடனான Cloud Computing மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவை (AI) ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 28 ஊழியர்களை Google நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தமது நிறுவனத்தில் இடமில்லை என்றும் இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் Google நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Google Cloud CEO தாமஸ் குரியனின் (Thomas Kurian) அலுவலகத்தை விட்டு அகல மறுத்த ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் Google தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய 28 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.