பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
———————————————————————————————-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்குகளானது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 4 ஆவது நாளாக கடந்த வெள்ளியன்று விசாரணை செய்யப்பட்ட போதே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.
21/4 உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.