ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ஓட்டங்களை குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உல்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியல் வருமாறு;
107 & 3/21 – கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக பஞ்சாப், பெங்களூரு, 2011
175* & 2/5 – கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக புனே, பெங்களூரு, 2013
104* & 2/38 – ஷேன் வாட்சன் (ஆர்ஆர்) எதிராக கேகேஆர், பிரபோர்ன், 2015
106 & 1/13 – ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) எதிராக ஆர்ஆர், புனே, 2018
109 & 2/30 – சுனில் நரைன் (கேகேஆர்) எதிராக ஆர்ஆர், கொல்கத்தா, 2024