நேற்று (13) இரவு 9.05 மணிக்கு சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறிய வேளையில் நிகழ்கால தமிழ் சிங்கள புத்தாண்டு ஜாதகத்தில் விருச்சிக ராசியின் காரணமாக கிரக நிலை மிகவும் சாதகமாக இல்லை என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அது நாட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல என்றும் பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டு ராசி பலன்களின்படி, எதிர்வரும் வாரத்தில் நீர் தொடர்பான அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சொத்து, விவசாயம் தொடர்பில் விளைவுகளை சந்திக்க நேரிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் முன்னெப்போதையும் விட கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.