பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஞானசார தேரரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பொது மன்னிப்பின் கீழ் மாத்திரமே விடுதலை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ள நிலையில் குறித்த பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ஞானசார தேரருக்கு கடந்த மார்ச் 28 ஆம் திகதி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.