follow the truth

follow the truth

November, 29, 2024
Homeஉலகம்தேசியக்கொடி அவமதிப்பு : மன்னிப்பு கோரிய மாலைத்தீவு முன்னாள் அமைச்சர்

தேசியக்கொடி அவமதிப்பு : மன்னிப்பு கோரிய மாலைத்தீவு முன்னாள் அமைச்சர்

Published on

மாலைத்தீவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மரியம், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அவற்றில் ஒன்றாக, மிகப்பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியிடம் மாலைத்தீவு மக்கள் விழ விரும்பவில்லை என்ற பதிவில், மரியம் இணைத்திருந்த படம் சர்ச்சையை கிளப்பியது. அந்தப் பதிவில் இந்திய தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் அசோக சக்கரத்தை மரியம் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தனது பதிவுக்கு மரியம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக மரியம் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், மாலைத்தீவு எதிர்க்கட்சியான எம்டிபி-க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மரியம் ஷியுனா என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலேசியாவை புரட்டிப்போட்ட வெள்ளம் – 4 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை...

அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல்...

போர் நிறுத்தம் தொடங்கிய போதும் லெபனான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

ராக்கெட் சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதால் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம்...