தற்போது தென்னாபிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா திரிபு பரவி வருவதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கொரோனா திரிபுக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை வைத்திய நிபுணர்கள் வழங்கி இருக்கிறார்கள். இந்த புதிய திரிபு கொரோனா வைரஸிற்கு கிரேக்க மொழிப் பெயரான “ஒமிக்ரான்” என பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்இ இந்த வைரசை “கவலைக்குரிய வைரஸ்” வகை என்ற பிரிவில் சேர்த்துள்ளனர்.