follow the truth

follow the truth

December, 23, 2024
Homeவணிகம்Q4 2023 சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிடும் TikTok

Q4 2023 சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிடும் TikTok

Published on

பாதுகாப்பான மற்றும் நேர்மறையான Online சூழலை வளர்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சியில், TikTok 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான அதன் சமூக வழிகாட்டுதல்கள் (Community Guidelines) அமுலாக்க அறிக்கையை வெளியிட்டது.

இந்த வெளியீடானது TikTok இன் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் நிலையான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது, மேலும் நம்பிக்கையை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் அதன் உலகளாவிய சமூகத்திற்கு பாதுகாப்பான தளத்தை உறுதி செய்கிறது.

2023 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலப்பகுதியில், TikTok இன் செயலூக்கமான நடவடிக்கைகள் உலகளவில் 176,461,963 வீடியோக்களை அகற்ற வழிவகுத்தது, இது பிளாட்ஃபார்மில் பதிவேற்றப்பட்ட அனைத்து வீடியோக்களிலும் சுமார் 1.0% ஆகும். இவற்றில் கணிசமான பகுதி, 128,300,584 வீடியோக்கள், தானியங்கு கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன, அதே நேரத்தில் 8,038,106 வீடியோக்கள் மேலும் மதிப்பாய்வு செய்தபின் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன.

குறிப்பிடத்தக்க வகையில், வழிகாட்டுதல்களை மீறிய சுமார் 89.9% வீடியோக்கள் Post செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டன, மேலும் காலாண்டில் செயலில் அகற்றும் விகிதம் 96.7% ஆக இருந்தது. இளைய பாவனையாளர்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சியாக, TikTok 13 வயதுக்குட்பட்ட தனிநபர்களின் சந்தேகத்திற்குரிய 19,848,855 கணக்குகளையும் நீக்கியுள்ளது.

TikTok இன் சமூக வழிகாட்டுதல்கள் அனைத்து பாவனையாளர்களுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் உண்மையான சூழலை வளர்ப்பதற்காக மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டுதல்கள் அனைத்து உள்ளடக்கம் மற்றும் பாவனையாளர்கள் முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்படுகின்றன, TikTok அதன் அமுலாக்க நடவடிக்கைகளில் நிலைத்தன்மை மற்றும் நேர்மைக்காக பாடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TikTok அதன் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காணவும், மதிப்பிடவும் மற்றும் நடவடிக்கை எடுக்கவும் புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது. Community Guidelines Enforcement Reportஇன் காலாண்டு வெளியீடு, நீக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் கணக்குகளின் அளவு மற்றும் தன்மை பற்றிய விபரங்களை வழங்குகிறது, முழு வெளிப்படைத்தன்மைக்கான TikTok இன் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது.

Q4 2023 report பற்றிய விரிவான விபரங்களுக்கு மற்றும் TikTok இன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் பற்றி மேலும் அறிய, TikTok இன் Transparency Centre ஐ பார்வையிடவும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...