நத்தார் பண்டிகையை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 23,24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மீண்டும் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.