எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் விலையை அமைச்சர்களால் தீர்மானிக்காமல் எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான உடனடி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் இக்காலத்தில் இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்கு ஒன்றும் செய்யாமல் கடந்த காலங்களில் தாமே விமர்சித்த விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதே பொருத்தமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.