follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉள்நாடுஅச்சுறுத்தலுக்கு அடிபணியப்போவதில்லை-ஜி.எல்.பீரிஸ்

அச்சுறுத்தலுக்கு அடிபணியப்போவதில்லை-ஜி.எல்.பீரிஸ்

Published on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையும் ஆணையாளரையும் நாம் அங்கீகரிக்கின்றோம். ஆனால் இலங்கைக்கு எதிராக சாட்சியங்களை திரட்டி சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் இலங்கையை கொண்டு நிறுத்தும் விசேட பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எவரும் எம்மை அச்சுறுத்துவதால் அடிபணியப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சபையில் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சாட்சியங்கள் எவ்வாறு திரட்டப்பட்டது,யார் மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்டதென்ற உண்மைகளை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சர்வதேச நாடுகளிடம் நாம் மண்டியிட தயாராக இல்லை. இலங்கையின் சுக கௌரவத்தை பாதுகாப்பதே எமது கொள்கையாகும். நாம் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கிக்கொண்டுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் அதிகாரிகள் இருவர் ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகின்றனர். அவர்களிடம் நாம் எதனையும் மறைக்க மாட்டோம். அவர்கள் இலங்கைக்கு வர முடியும், நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணிக்க முடியும், எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடியும்.

ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக நாம் பங்களிப்பு செலுத்தி வருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையை கட்டியெழுப்புவதிலும் இலங்கையர்கள் பாரிய சேவையாற்றியுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவையும், ஆணையாளரையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இலங்கைக்கு எதிராக சாட்சியங்களை திரட்டி சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் இலங்கையை கொண்டு நிறுத்துவதற்கு  நாம் ஒருபோதும் துணிய மாட்டோம்.

இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டம் மற்றும் சம்ரதாயங்களுக்கு முற்றிலும் விரோதமான செயற்பாடாகும். அவர்களுடன் இணைந்து பயணிப்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை.

செப்டெம்பர் மாதத்தில் கூடிய மனித உரிமைகள் பேரவையின் போதும் இலங்கைக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சாட்சியங்கள் இருப்பதாக ஆணையாளர் தெரிவித்தார். அந்த சாட்சியங்கள் என்ன? எவ்வாறு இந்த சாட்சியங்கள் திரட்டப்பட்டன? சட்ட முறைப்படி இதனை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த சாட்சியங்களை யார் பெற்றுக்கொடுத்தது,அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வெளிப்படை தன்மை இல்லாது, மறைந்திருந்து முன்வைக்கும் சாட்சியங்களை ஏற்றுக்கொண்டு சுயாதீன நாட்டிற்கு எதிராக சாட்சியங்களை பயன்படுத்த எந்த பொறிமுறையும் இல்லை.

அதேபோல் அவர்களின் நிலைப்பாடுகளை முன்னெடுக்க தேசிய நிறுவனங்களுக்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுக்கவும் வேண்டும். தேசிய பொறிமுறையில் ஆணைக்குழுக்கள்இ திணைக்களங்கள் இயங்க வேண்டும். அதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாக எமக்கு கிடைத்த தகவல்களை வெளிப்படுத்துவோம் என்றார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...