கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியினருக்கும் இடையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
11 வருடங்களின் பின்னர் கொழும்பு ரேஸ்கோர்ஸில் நடைபெற்ற நான்கு மூலை உதைபந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு எதிரான போட்டியில் இலங்கை உதைபந்தாட்ட அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளதுடன் வெற்றியைப் பாராட்டிய ஜனாதிபதி உதைபந்தாட்ட அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் (SAF) வெற்றி பெறுவதற்கும் ஜனாதிபதி உதைபந்தாட்ட அணியை ஊக்குவித்தார்.
வீரர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆண்டி மொரிசனும் கலந்து கொண்டார்.