follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP2இலங்கைக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கைக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும்

Published on

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கைக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என சீன ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர் சீ சின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...