follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா

முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா

Published on

அழகிகளை தேர்வு செய்ய உலகளவில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பெண்களுக்கு என்று தனி கட்டுபாடுகளை கொண்டுள்ளது. தங்களுக்கு என்று தனித்துவமான கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே அங்கு ஆட்சி முறையும் அமைந்துள்ளது.

சமீப காலமாக இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சாரதி அனுமதிபத்திரம் உரிமை, ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா சார்பாக 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) கலந்துகொள்கிறார்.

மேலும், சமீபத்தில் மிஸ் மற்றும் மிஸ்சஸ் கோபல் ஏசியன் அழகி போட்டி (Miss and Mrs Global Asian), மிஸ் ஏசியா இண்டர்நேஷனல் அழகி போட்டி (Miss Asia international) ஆகியவற்றில் சவுதி அரேபியா சார்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கின்றன++

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...