கென்யாவில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார வல்லுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதேநேரம் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு மருத்துவர்கள் பல நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு தங்களின் சம்பளத்தை உயர்த்தி, நல்ல சேவைச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
இந்த போராட்டத்தில் 7,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.
சில வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை சேவைகள் முடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.