நாம் ஒவ்வொருவருமே அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. இப்படி கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, உங்கள் முகமும் இப்படி கருமையாக காணப்படுகிறதா?
உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்கி, முகத்தைப் பொலிவோடும் புத்துணர்ச்சியுடனும் மாற்ற நினைக்கிறீர்களா?
ஃபேஸ் பேக் #1
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* காபித் தூள் – 2 டீஸ்பூன்
* கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காய சாறு – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு பௌலில் அரிசி மாவு, காபித் தூள், கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்து, வெங்காய சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.
ஃபேஸ் பேக் #2
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* பீட்ரூட் ஜூஸ் – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு பௌலில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் பீட்ருட் ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 4- முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #3
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்
* முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்
* டீ ட்ரீ ஆயில் – 3 துளிகள்
* கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி சாறு – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, முல்தானி மெட்டி, டீ ட்ரீ ஆயில், கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.
ஃபேஸ் பேக் #4
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* ஓட்ஸ் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
* பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
* தயிர் – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு பௌலில் அரிசி மாவு, ஓட்ஸ் பவுடர், பாதாம் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2-3 முறை பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள வறட்சி நீக்கப்படுவதோடு, சருமமும் பளிச்சென்று இருக்கும்.
அரிசி மாவு ஃபேஸ் ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* காபித் தூள் – 1 டீஸ்பூன்
* காய்ச்சாத பால் அல்லது தயிர் – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, காபித் தூள் மற்றும் பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மேசாஜ் செய்ய வேண்டும். பின் 5 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்னர் முகத்தைத் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இப்படி 10-12 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீககப்பட்டு, முகம் பளிச்சென்று இருக்கும்.