நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை அவர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கைவிட தீர்மானித்துள்ளது.
தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததாக பாகிஸ்தான் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அதிபராக பதவியேற்ற ஆசிப் அலி சர்தாரியும் தனது அலுவலகத்தில் பதவியேற்று, ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை பெறப்போவதில்லை என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.