ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க ஆஸ்திரேலிய அணி தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமைகளில் குறிப்பிடத்தக்க சீரழிவு” இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டமையினாலாகும்.
அதன்படி, அவுஸ்திரேலிய அணி தமது அரசாங்கத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணி 2021 இல் இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலும், 2023 இல் மனித உரிமைகள் பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு நாள் தொடரிலும் பங்கேற்க மறுத்துவிட்டது.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரை ஒத்திவைக்க முடிவு செய்த நிலையில், ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஆஸ்திரேலிய பிக் பாஷில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், 2023 தொடர் ஒத்திவைக்கப்பட்டதில் இருந்து பெண்கள் உரிமைகளில் “குறிப்பிடத்தக்க சரிவு” ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடியுள்ளது.
இதை சமூக ஊடகங்களில் விமர்சித்த ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக், ஐசிசி நிகழ்வுகளில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை ஆஸ்திரேலியா புறக்கணிக்கவில்லை என்று இருதரப்பு போட்டிகளில் சேரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.