முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று (13) சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த மற்ற விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய பசில் ராஜபக்ச, எதிர்வரும் தேர்தலுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக ஊடகங்களுக்கு அறிவித்தார்.
எனினும், சந்தோஷ் ஜாவை சந்திப்பதற்கு முன்னதாக, பசில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும், இறுதி முடிவு எடுக்கப்படாமல் அங்கு நடந்த கலந்துரையாடல் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது.