இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக இலாபத்தில் பால் மாவை விற்பனை செய்து வருவதாக அரசாங்க நிதிக் குழுவில் தெரியவந்துள்ளது.
குறித்த குழுவின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்ட போது இது தொடர்பில் தெரியவந்துள்ளது.
விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டாலும், அதற்கு திறைசேரி ஒப்புதல் அளிக்கவில்லை என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு பால் மாவுக்கான விலை சூத்திரத்தை தயாரித்ததாக அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷத சில்வா இங்கு தெரிவித்தார்.