follow the truth

follow the truth

January, 27, 2025
Homeஉள்நாடுஆனந்த் அம்பானியின் திருமணத்தில் உணவு சமைத்த இலங்கையர்கள்

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் உணவு சமைத்த இலங்கையர்கள்

Published on

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வைபவத்திற்கு உணவு சமைப்பதற்காக இலங்கையில் இருந்து 13 சமையல்காரர்கள் தெரிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் இன்று(07) நாடு திரும்பியுள்ளனர்.

கொழும்பில் உள்ள சிட்ரஸ்(Citrus) ஹோட்டல் குழுவினரும்
“சிலோன் கரி கிளப்” (Ceylon Curry Club) உணவகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமையல் கலைஞர்கள் குழுவினரும் சென்றிருந்தனர்.

இந்த 13 சமையல்காரர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை சமீபத்திய முறைகளில் தயாரித்து வழங்கியுள்ளனர்.

மார்ச் 03ஆம் திகதி திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் அழைப்பாளர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் வாய்ப்பு இலங்கை சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டநிலையில், அவர்கள் தயாரித்த உணவுக்கான பாராட்டுக்களின் அடிப்படையில் கூடுதல் நாளாக கடந்த 4ஆம் திகதி நிகழ்விற்கான இரவு உணவைத் தயாரிக்கும் வாய்ப்பும் இலங்கைச் சமையல் கலைஞர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி செய்யப்பட்ட முதல் உப்புத் தொகை நாட்டுக்கு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் உப்பு அடங்கிய முதல் கப்பல் இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சுமார்...

“முடிந்தால் எங்களை சாட்சிகளுடன் பிடியுங்கள்.. அதைவிட்டு ஊடக ஷோக்கல் வேண்டாம்”

நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறார்கள் என...

யோஷிதவுக்கு பிணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...