மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.
4.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட இதற்கான பணிகள் 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் ரூ.5,000 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இது, இந்தியாவின் தொழில்நுட்ப கட்டுமான வல்லமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.