அதிவேக வீதியில் கட்டணம் செலுத்தும் முறைமையை இலத்திரனியல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, LANKA QR முறைமையில் ஊடாக இலத்திரனியல் மயப்படுத்தப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முகாமைத்துவப்படுத்தப்படும் அதிவேக வீதிகளின் நுழைவாயிலில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அனுமதி பெற்ற அனைத்து நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.