காஸா பகுதியின் தெற்கு நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் குழுவொன்று தங்கியிருந்த கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.