காஸாவில் அமெரிக்க இராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காஸா மக்களுக்கு வழங்கும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா ராணுவம் வான் வழியாக காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவுகளை அனுப்பியது
மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.