மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக மத்திய வங்கி அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அதிகாரிகள் காலை 10.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதொடும் அன்றைய தினம் காலை 10.30க்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டதாக இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய துறைகளில் சம்பளம் திருத்தப்பட வேண்டும் என மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் சங்கம், உரிய சம்பள திருத்தம் நடைபெறவில்லையென்றால், மத்திய வங்கியின் எஞ்சியிருந்த கணிசமான அதிகாரிகள் மத்திய வங்கியை விட்டு வெளியேறியிருக்கக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்தில் மத்திய வங்கி அங்கு பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சுமார் நூறு அதிகாரிகளை இழந்துள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.