United Petroleum Australia இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 22ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதுள்ள 150 எரிபொருள் நிலையங்கள் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
யுனைடெட் பெட்ரோலியம் ஆஸ்திரேலியா (United Petroleum Australia) என்பது ஆஸ்திரேலிய துணைக் கண்டம் முழுவதும் 500 எரிபொருள் நிலையங்களை வைத்திருக்கும் ஒரு ஆஸ்திரேலிய நிறுவனமாகும்.
ஆஸ்திரேலியாவிற்கு வெளியே ஒரு மாநிலத்தில் பெட்ரோலியம் தொடர்பான பொருட்களின் விற்பனையில் இந்த நிறுவனம் இணைவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.