follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉலகம்பெலாரஸ் மீது தடைகளை விதிக்க நடவடிக்கை - ஐரோப்பிய ஒன்றியம்

பெலாரஸ் மீது தடைகளை விதிக்க நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியம்

Published on

பெலாரஸ் மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போலந்து எல்லை பகுதியில் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்சினையை தூண்டிய காரணத்திற்காகவும் பெலாரஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் தன் பாதுகாப்பு நிலையை பொருட்படுத்தாது குடியேறிகளை எல்லையை நோக்கி இட்டுச்செல்வதாகவும் ஐரோப்பிய ஒன்றிய முன்னணி இராஜதந்திரியான ஜோசெப் பொரல்டி கூறினார்.

இருப்பினும் இதனை பெலாரஸ் மறுக்கின்ற வேளை கடந்த திங்கட்கிழமை போலந்து துருப்பினரால் எல்லை கடவை ஒன்றில் வைத்து நூற்றுக்கணக்கான குடியேறிகள் தடுத்து நிறுத்தப்பட்டும் எல்லை முள்வேலிக்கு முன்னால் குடியேறிகள் வீதி ஒன்றில் அமர்ந்திருப்பதும் மறுபக்கம் போலந்து படையினர் நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காட்டுகின்றன.

போலந்து படைகளுக்கும் பெலாரஸ் படைகளுக்கு நடுவே சிக்கியிருக்கும் இந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் முன்னேறிச் செல்வதை போலந்து தடுக்கும் நிலையில் பின்வாங்குவதை பெலாரஸ் தடுப்பதாக போலந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செர்பியாவில் மாபெரும் போராட்டம் – அரசுக்கு எதிராக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

கடந்த சில மாதங்களாக செர்பியாவை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை செர்பியாவின் தலைநகரில்...

போப் பிரான்சிஸ் உடல் நிலையில் முன்னேற்றம்

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பெப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில்...

கோபகபானா கடற்கரையில் திரண்ட மக்கள்

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று(16) கோபகபானா கடற்கரையில் திரண்டனர். அடுத்த வருடம்...