2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய உறுதிமொழியை புதுப்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் இந்த நாட்டின் ஜனாதிபதியானால் பெண்களின் ஆரோக்கியத்தில் அதிகபட்ச கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் கண்டியில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாட்டில் சஜித் பிரேமதாச இது குறித்து கருத்து தெரிவித்தார்.
“.. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பெண்களின் ஆரோக்கியம் பற்றி பேசும் போது, என்னை ‘பேட் மேன்’ என்று அழைத்தனர். பெண்களின் ஆரோக்கியம் பற்றி பேசுவது இலங்கையில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஸ்காட்லாந்தும், நியூசிலாந்தும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குகின்றன. அந்த நாடுகள் செய்வதை நான் பின்பற்றுகிறேன், நீங்கள் என்னை பேட் மேன் என்று அழைக்கலாம்..”